கட்சிக் கொள்கைகள்

தமிழக மக்கள் கழகத்தின் 12 நல்வாழ்வுக் கொள்கைகள்

இலவசத்திற்கு மாறாக தன்னம்பிக்கை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தமிழக மக்களின் நிலையான வளர்ச்சிக்காக உழைக்கும் எங்கள் 12 முக்கிய நல்வாழ்வுக் கொள்கைகள்.

1

நிர்வாகத்தில் துல்லிய டிஜிட்டல் வெளிப்படைத்தன்மை

அரசு டெண்டர்கள், திட்ட நிதிகள், சேவை விண்ணப்பங்கள் அனைத்தும் ரியல்-டைம் பொது மக்கள் பார்வைக்குக் கொண்டு வரப்படும். லஞ்சத்தை ஒழிக்க இடைத்தரகர்கள் இல்லாத நவீன டிஜிட்டல் நிர்வாக முறை நடைமுறைப்படுத்தப்படும்.

2

கல்வி & திறனுக்கான 'எதிர்காலக் கற்றல்' கொள்கை

பாரம்பரிய கல்வியோடு செயற்கை நுண்ணறிவு (AI), தொழில்நுட்பப் பயிற்சி, தொழில் முனைவோர் கல்வி மற்றும் விளையாட்டு ஆகியவை பள்ளிப் பருவத்திலிருந்தே கட்டாயமாக்கப்படும். அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு உலகத் தரத்திற்கு உயர்த்தப்படும்.

3

உலகளாவிய வேலைவாய்ப்பு மண்டலங்கள்

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களை மட்டும் சார்ந்திராமல், தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்தப் பகுதியின் வளத்திற்கு ஏற்ப சர்வதேச தொழில்பூங்காக்களும் வேலைவாய்ப்பு மையங்களும் உருவாக்கப்படும்.

4

நவீன விவசாயம் & நீர் மேலாண்மை

விவசாயிகளுக்குச் சொட்டுநீர்ப் பாசனம், இயற்றை உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் முற்றிலும் மானிய விலையில் வழங்கப்படும். ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் நவீன தொழில்நுட்பத்துடன் தூர்வாரப்பட்டு, ஸ்மார்ட் தடுப்பணைகள் மூலம் நீர் தட்டுப்பாடு முற்றிலுமாகப் போக்கப்படும்.

5

சமத்துவச் சமூக நலன் & பாதுகாப்பு

சாதி, மத, பாலின வேறுபாடின்றி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின (ஆதிதிராவிடர், அருந்ததியர் உள்ளிட்ட) மற்றும் பழங்குடியின மக்கள் அனைவருக்கும் உரிய பொருளாதார மற்றும் சமூக நீதி உறுதி செய்யப்படும்.

6

மகளிருக்கு முழுமையான பொருளாதார சுதந்திரம்

பெண்கள் சுயமாகத் தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன்கள், அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் தொழில்முனைவோர் மையங்கள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்குப் பாதுகாப்பான நவீன விடுதிகள் அமைத்துக் கொடுக்கப்படும்.

7

இளைஞர்களுக்கான ஸ்டார்ட்-அப் & விளையாட்டுப் புரட்சி

இளம் தலைமுறையினரின் கண்டுபிடிப்புகளுக்கும் தொழில் தொடங்கும் கனவுகளுக்கும் அரசு தொடக்க நிதியை (Seed Fund) வழங்கும். சர்வதேச அளவில் பதக்கங்களை வெல்லும் வகையில் கிராமப்புற இளைஞர்களுக்கு நவீன விளையாட்டு அகாடமிகள் நிறுவப்படும்.

8

அனைவருக்கும் முழுமையான இலவசச் சுகாதார உத்தரவாதம்

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் நவீன வசதிகள் கொண்ட '24/7 அடிப்படை சுகாதார மையங்கள்' உருவாக்கப்படும். மூத்த குடிமக்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உயர்தர சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக வீடுகளுக்கே சென்று வழங்கப்படும்.

9

நெகிழி அற்ற பசுமைத் தமிழகம் & சுற்றுச்சூழல் பாதுகாப்பு

சுத்தமான குடிநீர், கழிவுநீர் மறுசுழற்சி மற்றும் சூரிய ஒளி சக்தி (Solar Energy) மூலம் இயங்கும் மின் கட்டமைப்பு விரிவுபடுத்தப்படும். காடுகளின் பரப்பளவு அதிகரிக்கப்பட்டு, மாசு இல்லாத சுத்தமான வாழ்வு உருவாகப்படும்.

10

சிறு, குறுதொழில்கள் (MSME) & மறுமலர்ச்சி திட்டம்

உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் குறைந்த வட்டியில் கடன், வரிச் சலுகைகள் மற்றும் சர்வதேச அளவில் தங்கள் பொருட்களை விற்பனை செய்யவதற்கான இ-காமர்ஸ் (E-commerce) தளங்கள் அமைத்துத் தரப்படும்.

11

மூத்த குடிமக்கள் நலன்

அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் காப்பீடு உறுதி செய்யப்படும். மூத்த குடிமக்களின் மருத்துவச் செலவு மற்றும் பாதுகாப்பிற்குத் தனி மையம் அமைக்கப்படும்.

12

தமிழ் மொழி & உலகளாவிய பண்பாட்டு மையம்

தமிழ் மொழியின் தொன்மையையும் தமிழ்நாட்டின் கலை, பண்பாட்டை, வரலாற்றையும் உலகளாவிய அளவில் கொண்டு சேர்க்க நவீன தொல்லியல் அருங்காட்சியகங்களும் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மையங்களும் விரிவுபடுத்தப்படும்.

கட்சியின் கொள்கை வடிவம் — சிந்தனைப்போரின் 6 அடிப்படைகள்

1

திறன் முனைவு அணுகுமுறை

பட்டத்தை விட தொழில்முனைவுத் திறனே முதன்மை. வெளியேறும் ஒவ்வொரு மாணவரும் ஒரு திறனுடன் மட்டுமே வெளியேற வேண்டும்.

2

சாதி அற்ற சமத்துவ வாழ்வியல்

சாதி என்பது பிறப்பால் வருவது அல்ல என்ற உணர்வை உருவாக்கி, பழைய ஒடுக்குமுறை அடையாளங்களை முழுமையாகக் கடந்து, மனிதநேயத்தையும் சமத்துவத்தையும் மட்டுமே முதன்மைப் பண்பாடாக மாற்றுவது.

3

அறிவியல் சார்ந்த பகுத்தறிவு

மனிதனை அடிமைப்படுத்தும் சடங்குகள், மூடநம்பிக்கைகள் மற்றும் போலி ஆதிக்கங்களைத் தகர்த்து, மக்களிடம் அறிவியல் பூர்வமான சிந்தனையையும் சுயமரியாதையையும் வளர்த்தல்.

4

பூரண பெண் விடுதலை

பெண்கள் யாரையும் சார்ந்திருக்காமல், பிறப்பு முதல் வாழ்நாள் இறுதி வரை சுயமாக உழைத்து பொருளாதார சுதந்திரம் பெறுவதுடன், அனைத்துத் துறைகளிலும் 50% சம பங்களிப்பை உறுதி செய்வது.

5

மக்கள் பணி

ஏழை, எளிய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல்.

6

மகேசன் பணி

கடவுளுக்குச் செய்யும் தொண்டு அல்லது ஆன்மீகக் கடமை.